புனித சவேரியாருக்கு அன்பாஞ்சலி
உலகமனைத்தையும் குப்பையெனக்
கருதி அதை உதறிய உத்தமரே
கருதி அதை உதறிய உத்தமரே
கால்கள் புண்ணாகிய போதும்
பொன்னான மறை போதித்த புண்ணியரே
பொன்னான மறை போதித்த புண்ணியரே
மொழி அறியாமலும் திசை தெரியாமலும்
எம் முன்னோரை வசப்படுத்திய ஞான ஒளியே
எம் முன்னோரை வசப்படுத்திய ஞான ஒளியே
சிலுவையே சீர்மகுடம் என அதை மட்டுமே
ஆயுதமாக்கி ஆன்மாக்களை வென்றவரே
ஆயுதமாக்கி ஆன்மாக்களை வென்றவரே
இறை வார்த்தைக்கேடயமாக இறை நம்பிக்கை
வாழ்வாக வலம் வந்த வெற்றி வீரரே
வாழ்வாக வலம் வந்த வெற்றி வீரரே
இந்தியாவை நேசித்து இந்தியாவுக்காக
என்றும் பரிந்து பேசும் எம் தந்தையே
என்றும் பரிந்து பேசும் எம் தந்தையே
ஸ்பெயின் தேசத்தில் அரச குடும்பத்தில்பிறந்து
இறை அன்பினால் ஏழையான எம் முனிவரே
இறை அன்பினால் ஏழையான எம் முனிவரே
கோவாவிலும் தென்தமிழகத்திலும் போதித்து
மீனவரையும் மற்றவரையும் மனமாற்றிய தவமே
மீனவரையும் மற்றவரையும் மனமாற்றிய தவமே
ஆசீரளித்த கரத்தையே சுயவிமர்சனம் எழுதி
அறிவிக்கச் செய்த அற்புதமானவரே
அறிவிக்கச் செய்த அற்புதமானவரே
தவத்தின் வலிமையைக் கூட்ட தன்னையே
பலவீனமாக்கிய தன்னிகரில்லா தூயவரே
பலவீனமாக்கிய தன்னிகரில்லா தூயவரே
தொலைத்த சிலுவையை மீட்டுக் கரை சேர்த்த
கடல் வாழ் நண்டின் நல்ல நண்பரே
கடல் வாழ் நண்டின் நல்ல நண்பரே
நூற்றாண்டாக நினைவில் கொள்ள எம்மோடு உறையும் இயேசுவின் நற்சீடரே
எங்கள் அண்ணல் பிரான்சிஸ் சவேரியாரே !
எங்கள் பாதுகாவலரே
எங்கள் வழிகாட்டியே
உம் பணியைத் தொடர்வோம் நன்றே ! !