Saturday, 21 November 2020

உலக விதிகளை மீறிய மன்னர்*

 *உலக விதிகளை மீறிய மன்னர்* 


அரசு என்றால் மாளிகை உண்டு

நம் அரசர் பிறந்ததே ஏழ்மையில் தானே....

அரசு என்றால் ஆற்றல் உண்டு

நம் அரசர் ஆற்றலை துறந்தவர் தானே...

அரசு என்றால் படை பலம் உண்டு

நம் அரசர் ஏழைகளின் நண்பர் தானே...

அரசு என்றால் மகிமை உண்டு

நம் அரசர் மகிமையை மறைத்தவர் தானே...

அரசு என்றால் ஆட்சி உண்டு

நம் அரசர் இறையாட்சியை

உருவாக்கியவர் தானே...

அரசு என்றால் கிரீடம் உண்டு

நம் அரசர் நம் பாவ

முள் கிரீடம் அணிந்தவர்தானே....

மன்னர் என்றால் மார்புக்கவசம உண்டு

நம் அரசர் நமக்காக மார்பில் நொறுங்கியவர் தானே....

 *ஆனால்* 

மன்னர் என்றால் எல்லை உண்டு

நம் மன்னர் உலகுக்கே மன்னர்

மன்னர் என்றால் ஒரு பிரிவு மக்கள் உண்டு

நம் அரசருக்கு எல்லையில்லா  மக்கள்

மன்னர் என்றால் சாம்ராஜ்யம் உண்டு

நம் அரசருக்கு சகலமும் அவரின் அசைவில்....


அரசருக்கெல்லாம் அரசரே எம் இறைவா !

உம் அரசாட்சியின் உரிமை மக்களாய் எமை காத்திடுமே...

இறையாட்சியின் விழுமியங்களை நாளும் நிலைநிறுத்த துணையாடுமே....


அன்புடன்

கஸ்மீர் ரோச்

சின்னமலை

9382709007

Tuesday, 10 November 2020

உறுப்புகளில் சிறியதே....**

 *உறுப்புகளில் சிறியதே....** 

உறவுகளை நேசிப்பதும் நீயே....

உணர்வுகளை காயப்படுத்துவதும் நீயே...

சீர்திருத்த கருத்துகளையும் பகர்கிறாய்..

சீரழிக்கும் செயலையும் செய்கிறாய்..

உடலுக்கு உகந்தவையும்

சுவைக்கிறாய்...

உடலைக் கெடுப்பதையும் ருசிக்கிறாய்...

இறை வேண்டலில் ஆவியானவரை துதிக்கிறாய்...

இகழ்ந்து வசைச் சொல் சொல்லி வதைக்கிறாய்..

அதெப்படி....

ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்ட நீரூற்றில் நல்லநீர் மட்டும் தானே வரும்....

மாறுபட்ட நீர் வராதே...

ஆவியானவரால் வழிநடத்தப்பட்ட விளக்குத்தண்டில் ஒளிமட்டும் தானே பிரகாசிக்கும்.....

இருளும் ஒளியும் ஒருசேர தோன்றுமா...

இதோ....


 *நன்நாக்கு அழியா

நம் நாயகன் தூய அந்தோனியாரைப் போன்று* 

நாவடக்கம் கொள்வோம்

நாவினால் அவர் பணிதொடர முயல்வோம்

நாவை தூய்மையாக்குவோம்

நாவினால் நல்லன மட்டுமே பகர்வோம்

நாவினை நாளும் நயமாக வைத்திருப்போம்.

அன்பின் இறைவா,

எம் நாவினை

வல்லமையுள்ள,

இனிமையுள்ள,

வலிமையுள்ள,

நாவாக மாற்றுமே! 

நல்லன சொல்லவும்,

நயம் பகரவும்


நாளும் நற்சொல் பகரவும் காத்திடுமே.


அன்புடன்,


கஸ்மீர் ரோச்


9382709007

Friday, 6 November 2020

 *எத்தனை அழகு** 

 *நம் கத்தோலிக்கம்* 



இறை வார்த்தையை மையப்படுத்தி படிப்பினை தருகின்றதே

இறையுண்மைகளை வகைவகையாக மனதில் பதியச் செய்கின்றதே

நம்பிக்கையும்,பாரம்பரியமும் ஒன்றிப்பின் நற்போதனைகளை வழங்கிடுதே

பாரம்பரியமும் புதியவையும் அழகுற வடிவமைக்கப்படுகிறதே

அன்னையை மையப்படுத்தி நம்  கத்தோலிக்கமே ஜொலிக்கிறதே

புனிதர்களின் ஒவ்வொரு வாழ்வும் படிப்பினையாக்கப்பட்டு உரமாக்கப்படுகிறதே

அருட்சாதனங்களால் வளமாகவே வாழ்வாகவே வகைப்படுத்துகிறதே

அன்பையும் மன்னிப்பையும் நாம் பற்றிக்கொள்ள தினமும் போராடுகிறதே...

நம் கத்தோலிக்கமே !

நம் உயிரே !

உன்னில் மகிழ்ந்து,

உன்னை மகிமைப்படுத்துவோமே ! !

அன்புடன்,

கஸ்மீர் ரோச்,

சின்னமலை

சென