*தூயவரே.. எம் துணையாளரே...*
திருத்தைலத்தால் உமதாக்கியவரே
திரு அவையில் நிரந்தரமாக்கியவரே
திருந்தி வாழ இன்றே வந்திடுவீரே
திருத்தைல ஆசீரில் மகிழ வைத்திடுவீரே
துணையாளரே தூயவரே
துன்புறும் யாம் வலுபெறவே
தூய மேகமாய் வருவீரே
நம்பிக்கையாளரே, நலமளிப்பவரே
நல்லன நிலைக்கவும்
நற்செயல் புரியவும்
நம்பிக்கை முத்திரையருள்வீரே
நீங்கிடாதவரே,
நீராய் நிலைப்பவரே
நீக்கமற ஊற்றுத் தண்ணீரால்
நீடிய நல்வாழ்வளித்திடுவீரே
மென்காற்றாய் எமை சூழ்பவரே
மெய்ப்பொருள் காணவும்
மெய்யங் கடவுளை மறவாதிடவும்
மெய்யறிவு நல்குபவரே
அனலாய் எமை காப்பவரே
அன்புத் தீயாய் அருகமர்பவரே
அத்தனை பேரிடர்களிலும்
அன்புறுவாய் எம் நடுவில் அமர்வீரே
கரங்கள் வழி ஆசீர்வதிப்பவரே
கயமைகளை சுட்டு தூய்மையாக்கிடுவீரே
கனிகளை கைக்கொள்ள காத்திடுவீரே
கர்த்தரின் கரத்தில் சேர்ப்பித்திடுவீரே
சாந்தப் புறா வடிவானவரே
சாந்தமல்லாதவற்றை புறந்தள்ளுபவரே
சாத்தானை வெறுக்க ஆற்றலானவரே
சாம்பலாம் எம் சோம்பல் அகற்றுபவரே