Saturday, 3 December 2016

புனித சவேரியாருக்கு அன்பாஞ்சலி

புனித சவேரியாருக்கு அன்பாஞ்சலி
உலகமனைத்தையும் குப்பையெனக்
கருதி அதை உதறிய உத்தமரே
கால்கள் புண்ணாகிய போதும்
பொன்னான மறை போதித்த புண்ணியரே
மொழி அறியாமலும் திசை தெரியாமலும்
எம் முன்னோரை வசப்படுத்திய ஞான ஒளியே
சிலுவையே சீர்மகுடம் என அதை மட்டுமே
ஆயுதமாக்கி ஆன்மாக்களை வென்றவரே
இறை வார்த்தைக்கேடயமாக இறை நம்பிக்கை
வாழ்வாக வலம் வந்த வெற்றி வீரரே
இந்தியாவை நேசித்து இந்தியாவுக்காக
என்றும் பரிந்து பேசும் எம் தந்தையே
ஸ்பெயின் தேசத்தில்  அரச குடும்பத்தில்பிறந்து
இறை அன்பினால் ஏழையான எம்  முனிவரே
கோவாவிலும் தென்தமிழகத்திலும் போதித்து
மீனவரையும் மற்றவரையும் மனமாற்றிய தவமே
ஆசீரளித்த கரத்தையே சுயவிமர்சனம் எழுதி
அறிவிக்கச் செய்த அற்புதமானவரே
தவத்தின் வலிமையைக் கூட்ட தன்னையே
பலவீனமாக்கிய தன்னிகரில்லா தூயவரே
தொலைத்த சிலுவையை மீட்டுக் கரை சேர்த்த
கடல் வாழ் நண்டின் நல்ல நண்பரே
நூற்றாண்டாக நினைவில் கொள்ள எம்மோடு உறையும் இயேசுவின் நற்சீடரே
எங்கள் அண்ணல் பிரான்சிஸ் சவேரியாரே !
எங்கள் பாதுகாவலரே
எங்கள் வழிகாட்டியே
உம் பணியைத் தொடர்வோம் நன்றே ! !