Sunday, 8 June 2025

வாரும் தூய ஆவியே...

*வாரும் தூய ஆவியே...* 


அன்பின் ஆவியே

அனலாய் வாருமே


ஆற்றலின் ஆவியே

ஆறுதலைத் தாருமே


இனிமையாம் ஆவியே

இல்லந்தனில் எம்முடன் தங்குமே


ஈர்ப்பின் ஆவியே

ஈகையின் வழி நடத்துமே


உண்மையின் ஆவியே

உகந்தோராய் எமை மாற்றுமே


ஊக்கமூட்டும் ஆவியே

ஊனியல்பைக்  கட்டுப்படுத்துமே


எழுச்சியின் ஆவியே

என்றும் உம் வழி நடத்திடுமே


ஏழையரின் ஆவியே

ஏற்றம் எமக்கருளுமே


ஐயம் தீர் ஆவியே

ஐம்புலன்களையும் காத்திடுமே 


ஒன்றிப்பின் ஆவியே

ஒற்றுமையில் வளர்த்திடுமே


ஓங்கு புகழ் ஆவியே

ஓய்வின்றி இரட்சித்திடுமே


அன்புடன்


கஸ்மீர் ரோச்,

9382709007

Sunday, 5 January 2025

மூவர் தந்த நான்காம் பரிசு*

 *மூவர் தந்த நான்காம் பரிசு


பொன்னுடன் பொன்னான நேரத்தை கொண்டு வந்தோரே


தங்கத்துடன் தங்க மனங்களை தர வந்தோரே


தூபத்துடன் தூய தாழ்ச்சியை

காணிக்கையளித்தோரே


தூப புகை போல தம்மை மறைத்து உயர்வடைந்தோரே


வெள்ளைப்போளம் போல வெண் மனங்கொண்டோரே


வெள்ளைப்போள பயன் போன்று தியாக நெஞ்சத்தினரே


உம்மைப் போல யாமும்


பொன்னான நேரத்தையும்,

தங்கமான காலத்தையும்,

தூபமான தியாகத்தையும்,

நறுமண உழைப்பையும்,

மாசற்ற நல்மனதையும்,

தூய்மை நல்லுரைகளையும்


நான்காம் பரிசாக இறைவனுக்களிக்க

துணையாகுமே...


 *நான்காம் பரிசு புத்தக சாராம்சம்*


அன்புடன்

கஸ்மீர் ரோச்